Previous slide
Next slide
வெப்பாலமூர்த்தி முருகன் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம்,கொட்டாவூர் அண்ணா நகர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள புறாகுன்று முருகர் கோவில்.

முன்பு ஒரு காலத்தில் பரமன் கட்டளைப்படி பார்வதி அம்மன் அபித குஜலாம்பாள் வடிவமேற்று திரு அண்ணாமலையில் அஷ்ட லிங்க பூஜை செய்ய ஜலம் கிடைக்காததால் தன் செல்வக் குமாரனாகிய முருகப்பெருமானை நினைக்க முருகப்பெருமான் அன்னையின் முன் தோன்றி தாயே யாது காரணமாக என்னை அழைத்தீர்கள் எனக் கேட்கவும் அன்னையானவள் லிங்க பூஜை செய்ய ஜலம் இல்லை என்று சொல்லவும் முருகப்பெருமான் அன்னையே கவலை வேண்டாம் இதோ ஜலம் உண்டாக்கிறேன். என்று தன் கரத்தில் இருந்து வேலாயுதத்தை எடுத்து வீசவும் அந்த வேலானது கிரவுஞ்சகிரி என்று சொல்லக்கூடிய ஜவ்வாது மலையை இரு பிளவாக பிளந்து நதியை உண்டாக்கவும் அந்த நதியில் பெருக்கெடுத்து வந்த ஜலத்தில் அன்னை அஷ்ட லிங்க பூஜை செய்யவும் தாய்க்காக சேய் உண்டாக்கிய நதிக்கு செய்யாறு நதி என்று பெயர் பெற்று விளங்கி வரக்கூடிய செய்யாறு  நதியின் மேல் புறத்திலும் கிரவுஞ்சகிரி என்னும் ஜவ்வாது மலையின் தென் புறத்திலும் கீழ் புறத்திலும் பெருங்காட்டார் நீர்வீழ்ச்சி அருகாமையிலும் அமைந்து இருக்கக்கூடிய புறாக்கள் தஞ்சமடைந்து கூட்டமாய் இருப்பதால் புறாக்குன்று என்றும் மயில்கள் வந்து நடன மாடுவதால் மயில்குன்று  என்றும் சொல்லக்கூடிய புறாக்குன்றின் மீது ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கோவில் உள்ளது. Read More…

 
Scroll to Top